தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கைதிகளுக்கான சலுகைகள்
இதன்படி நாளையதினம்(14), சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகள் பார்வையிடும் விதிமுறைகளுக்கு அமைய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |