உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்ய காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது, மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
குறித்த இந்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை
அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk க்கு பிரவேசித்து, Our Services பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கலாம்.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி (DOE) மூலம் “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://onlineexams.gov.lk/eic இணையதளத்தை அணுகுவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், ஏற்கனவே மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இணைய வழி கிளை : 0113661122, 0113671568
பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 0112785231, 0112785681
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |