அல்- மதீனா பாலர் பாடசாலைகளின் மாணவர்கள் விடுகை நிகழ்வு
மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் பாலர் பாடசாலைகள் சம்மேளன தலைவர் எம்.எச். எம். அஸ்வர் தலைமையில் நேற்று (19) நடைபெற்றுள்ளது.
இதன்போது, பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் கௌரவிப்பு
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். ரஜாப்டீன், கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற எம்.ஐ.எம். சைபுத்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் மௌலவி ஏ.பி.எம். ரம்சீன் (காஸிமி) கலந்து கொண்டார்.
மேலும், இளம் சூழலியலாளர் மின்மினி மின்ஹா, மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |