திருகோணமலையில் போதைப்பொருளுடன் இருவர் கைது
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பை ஆறு, சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 1.530g ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, நிலாவெளி, இரக்ககண்டி பகுதியில் 5.190g ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்ற நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |