சாய்ந்தமருதுவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 92 மாணவர்கள் சாதனை
அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது(Sainthamaruthu) கல்வி கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 92 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.
இதில் சாய்ந்தமருதிலுள்ள அல்-ஹிலால் வித்தியாலயம் 231 மாணவர்கள் தோற்றி 49 பேரும்(21.65 %), அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை 159 மாணவர்கள் தோற்றி 31 பேரும் (19.5%), லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம் 59 மாணவர்கள் தோற்றி 10 பேரும் (16.95%) சித்தியடைந்துள்ளனர்.
மேலும், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் 21 மாணவர்கள் தோற்றி 01 மாணவரும்(4.35%), றியாழுல் ஜின்னா வித்தியாலயம் 28 மாணவர்கள் தோற்றி 01 மாணவரும் (3.57%) சித்தியும் பெற்றுள்ளார்கள்.
சாய்ந்தமருது வலயம்
இந்த நிலையில், எட்டு பாடசாலைகளை கொண்ட சாய்ந்தமருது கோட்டத்தில், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்தில் இருந்து 35 மாணவர்களும், அல் கமரூன் வித்தியாலயத்தில் இருந்து 33 மாணவர்களும், மல்ஹர்ஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து 22 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
எனினும், எந்த மாணவர்களும் வெட்டு புள்ளிக்கு மேல் பெறவில்லை என்பதுடன் சாய்ந்தமருது கோட்டத்தில் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை சித்தி வீதத்தில் முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டதோடு, சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் வெட்டுப்புள்ளிக்கு மேல் அதிக மாணவர்கள் சித்தி பெற்று முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |