போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Crime Social Media
By Laksi Jan 08, 2025 05:40 AM GMT
Laksi

Laksi

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

போலியான குறுஞ்செய்திகள்

இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Advice To Avoid Fake Text Messages

இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW