வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று(08) காலை பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன(Kemunu Vijeratna) தெரிவித்துள்ளார்.
இதன்படி, தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் பேருந்து சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காகவே இன்று சங்கத்தின் பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட வாகனச் சோதனையையும் பொலிஸார் நேற்று(07) மேற்கொண்டுள்ளனர்.
பேருந்து ஆய்வுகள்
மேலும், இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் பேருந்துகளை ஆய்வு செய்யவும், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் சிவில் உடையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த திட்டத்தின் மூலம் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 18 வகையான உதிரி பாகங்களை பொருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |