க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவித்தல்
Ministry of Education
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Rakshana MA
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம்(26) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.
உயர்தரப்பரீட்சை
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அதில் 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.
நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |