சிங்கள பேரினவாதிகளுடன் வாழ முடியாது! ரிஷாட் கடும் உரை

Parliament of Sri Lanka Risad Badhiutheen Sri Lankan Peoples Sri Lanka Final War
By Rakshana MA May 22, 2025 05:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

தனி நாடு கோரி ஒரு இனம் போராடிய வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது என்றும், நாட்டில் உள்ள சிங்கள பேரினவாதிகளுடன் வாழ முடியாது என தமிழீழத்துக்காக அந்த இனம் பல உயிர்களை வழங்கியுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கடுமையாக உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழீழத்துக்கான மற்றும், தமது மண்ணுக்கான போராடி உயிரிழந்த இனத்தின் வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது. சயனைட் குப்பிகளை அணிந்துக்கொண்ட போராட்டமது.

நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு

நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு

மண்ணுக்கான போராட்டம்

30000 தொடக்கம் 40000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களும், சிங்களவர்களும், இராணுவத்தினரும் இதில்கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.


இதனை மறந்து இன்று நாடாளுமன்றில் நீங்கள் (ஆளும் தரப்பு) பேசலாம். ஆனால் மக்களினுடைய வேதனைகள் உள்ளங்களில் இருந்து கொண்டே இருக்கின்றன.

மேலும், இதுவரையில் பண்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் எந்த விதமான அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே.

மக்களுக்கான சேவையை செய்யவேண்டிய தேவை எமக்கும் உள்ளது. அப்படியென்றால் எதிர்கட்சியை பக்கசார்பாக பார்ப்பது நியாயம் இல்லாத ஒன்று.

வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

அரசாங்கத்தின் அசமந்த செயற்பாடு

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படுகிறது. பாதுகாப்பு இந்த நாட்டில் சீராக இருந்தால் பயமில்லை.

ஆனால் நமது நாட்டில் சாதாரண மக்களும் கொல்லப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.

ஆனால் சபாநாயகரோ ஒரு பொம்மைபோல இருக்கின்றார். ஒருநாள் கூட எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காத சபாநாயகரை முதன் முதலாக நாங்கள் காண்கின்றோம்.

24 ஆண்டுகளாக நாடாளுமன்றில் இருந்தும் இப்படிபட்ட ஒரு பொம்மை, சபாநாயகராக பதவி வகிக்கவில்லை” என கடும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள்

இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW