முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி முபாரக், கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமார் 350 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இதில் 30% தற்போது சிறு பணியாளர்களாக கொண்டவர்களைக் கொண்டு நிரப்புதல் வேண்டும்.இது அவர்களின் பதவி உயர்விற்கான ஒரு வாய்ப்பாகும்.
இடமாற்றம்
மத்திய அரசு கடந்த மாதம் பரீட்சை நடத்தி பெறுபேறுகளை வெளியிட்டுள்ளமையும் இதற்கு முன்பு ஒரு தடவையும் ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும், வேறு மாகாணங்களிலும் ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி கிழக்கில் ஆட்கள் சேர்க்கப்படாததையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடம் நிரப்பப்படாததால் சேவையில் உள்ளவர்கள் இடமாற்றம் பெறுவதற்கு தடங்கலாக இருப்பதுவும், வேலைப் பழு அதிகரித்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |