அக்கரைப்பற்றில் மேயர் சபீஸின் வீட்டைச் சுற்றி வளைத்த பொலிஸார்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று மாநகர மேயர் வேட்பாளர் எஸ்.எம்.சபீஸின் வீடு பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் வேட்பாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.எம்.சபீஸ் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் தேர்தல் விதிகளை மீறி வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
சுற்றிவளைப்பு
அதனையடுத்து நேற்றையதினம்(02) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் வேறு இடங்களில் இருந்து வரவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், சபீஸின் வீட்டைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 10க்கு மேற்பட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து சபீஸின் வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


