அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து
அக்கறைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் இன்று(23) விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில், இரண்டு டிப்பர் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துச்சம்பவம்
அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனங்கள் எதிர் எதிரே மோதிய நிலையில் அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



