கோவிட்டின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

COVID-19 COVID-19 Vaccine Sri Lanka
By Mayuri Jul 30, 2024 01:38 PM GMT
Mayuri

Mayuri

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கோவிட் 19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும். கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

கோவிட்டின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் | Accelerated Influenza

குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

பாடசாலைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும்.

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW