ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அம்பாறை மாவட்டம் - ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (14 ) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டமானது, ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரவியராஜ் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
குழு கூட்டம்
இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றனவா? என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது.
இப்பிரதேச செயலக பிரிவிலுள்ள குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு,யானை வேலி அமைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஏ.தர்மதாஸ், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











