மட்டக்களப்பு கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட விழா..!

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 11, 2025 10:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு (Batticaloa) மாநகரசபையும் இணைந்து நடத்திய ஆடிமாத பௌர்ணமி கலை விழா நேற்று (10) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் கலந்துகொண்டார்.

O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பத்திகதி அறிவிப்பு

O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பத்திகதி அறிவிப்பு

கலை விழா

இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இலைமறை காயாக உள்ள கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான மேடையினை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.  

Aadi festival 2025 Batticaloa beach

அத்தோடு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கலைஞர்கள் பலர் தமது திறமைகளை மேடையேற்றினர்.

அதேவேளை இந்த நிகழ்வில் முதல்வராக பதவியேற்றுள்ள சிவம்பாக்கியநாதனை மாநகரசபையின் ஆணையாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  

பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த பயங்கரம்: தொடரும் விசாரணை

பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த பயங்கரம்: தொடரும் விசாரணை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW