மீட்புப்பணியிலும் தொழுகையை நிலை நிறுத்திய பணியாளர்! கிழக்கில் நடந்த சம்பவம்

Climate Change Eastern Province Kalmunai Floods In Sri Lanka
By Rakshana MA Jan 22, 2025 07:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிட்டங்கி வீதியில் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியால் பயணிப்பவர்களை பாதுகாப்பாக மீட்டு, அறிவுறுத்தல் வழங்கி உதவி வருகின்ற மீட்புப்பணியாளர் ஒருவர் அவ்விடத்திலே தொழுகையை விடாமல் நிறைவேற்றியமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்று(21) கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த இரண்டு நாட்களாக கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் தன்னார்வமாக அப்பகுதிக்கு வருகை தந்து சிரமப்படும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

கடமைகளுக்கான முக்கியத்துவம் 

இதனடிப்படையில் தொழுகை நேரம் (இறை வணக்கம் ) வந்தவுடன் வெள்ள நீர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உரிய பாதுகாப்பு உடையுடன் தமது சமயக் கடமைகளில் ஈடுபட்டமை அப்பகுதியால் பயணம் செய்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீட்புப்பணியிலும் தொழுகையை நிலை நிறுத்திய பணியாளர்! கிழக்கில் நடந்த சம்பவம் | A Worker Who Stopped Praying In The Rescue Work

குறித்த கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் அண்மைக் காலமாக அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உயிர்களுக்கு மதிப்பளித்து அனர்த்த காலங்களில் தன்னார்வமாக உதவி வருவதுடன் அப்பகுதி மக்களின் அபிமானத்தையும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலத்தின் கீழ் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவால், இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு உத்தரவு

அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு உத்தரவு

சிரமப்படும் மக்கள்

இது தவிர கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி இரண்டு நாட்களாக அப்பகுதி ஊடாக பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள், மாணவர்களை பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு உதவி செய்வதுடன் தன்னார்வமாக தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அப்பகுதியில் பயணம் செய்ய சிரமப்படும் பொதுமக்களை இனங்கண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளமையும் காண முடிகின்றது.

மீட்புப்பணியிலும் தொழுகையை நிலை நிறுத்திய பணியாளர்! கிழக்கில் நடந்த சம்பவம் | A Worker Who Stopped Praying In The Rescue Work

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் பரவலாக காணப்படுவதுடன் சில இடங்களில் வடிந்தோடி காணப்படுகின்றது. தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் பிரதேச மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என  பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கில் தனியார் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகள்

கிழக்கில் தனியார் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகள்

மட்டக்களப்பில் தொடர் மழையால் அழிவடைந்துள்ள வயல்கள்

மட்டக்களப்பில் தொடர் மழையால் அழிவடைந்துள்ள வயல்கள்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery