மட்டக்களப்பில் 40 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்திற்கு அமைய 40 வருடங்களாக பேருந்து போக்குவரத்து இல்லாத மாவலியாறு பிரதேசத்திற்கு பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளதுடன் மயிலம்பாவலி கிராமத்தில் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்றிட்டமானது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின்(Anura Kumar Dissanayake) எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலை திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவை
மேலும், இந்த கிராமத்தை சுற்றி தன்னாமுனை, சவுக்கடி, தளவாய் விபுலானந்தபுரம், ஆறுமுகத்தான் குடியிருப்பு என பல கிராமங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் சந்தை வசதிக்காக 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்ல வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
இந்த நிலையில், சந்தை திறக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து கிராம மக்களும் இலகுவில் சென்று பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை தற்போது உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.
மேலும், அந்த ஊரிலே உற்பத்தி செய்கின்ற விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தன் மூலம் சாதாரண மக்கள் பெரிதும் பயனடைவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |