காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Jan 08, 2025 05:10 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa)- காத்தான்குடி பகுதியில்  பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ​பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, காத்தான்குடி (Kattankudy), புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

மேலதிக விசாரணை

இதன்போது கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 10 நபர்களும், கசிப்பு விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 நபர்களும், வேகமாக வாகனம் ஓட்டியமை உட்பட வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 பேருமாக 97 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது | 97 People Arrested In Kattankudy

இதனையடுத்து,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம்

பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம்

திருகோணமலை பகுதியில் நடப்பட்டுள்ள பதாகையால் மக்கள் மத்தியில் பரபரப்பு

திருகோணமலை பகுதியில் நடப்பட்டுள்ள பதாகையால் மக்கள் மத்தியில் பரபரப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW