பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம்

Eastern Province Kalmunai Parenting School Incident
By Rakshana MA Jan 08, 2025 03:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் அதிபரை பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறு கோரி பெற்றோர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று(07) சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது இஸ்மாயில் வித்தியாலயத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன், குறித்த பாடசாலை அதிபரின் செயற்பாடுகளை எதிர்த்து பல்வேறு கோஷங்களுடன் பெற்றோர்கள் பாடசாலை முன்னால் ஒன்று கூடியதுடன் அங்கு சிறு பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்ப்பு போராட்டம் 

இந்த நிலையில் உடனடியாக அங்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் பீ.எம்.வை. அறபாத் மற்றும் சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.எம். நாசிர் அலி ஆகியோர் இணைந்து பெற்றோர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் | Protest Against Of School Principal At Sammanthura

அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(10) மேற்குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்து குறித்த போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நுவரெலியாவில் கண் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

நுவரெலியாவில் கண் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery