நுவரெலியாவில் கண் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Eye Problems Nuwara Eliya Nalinda Jayatissa
By Rakshana MA Jan 07, 2025 01:33 PM GMT
Rakshana MA

Rakshana MA

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 17 நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த விடயத்தினை இன்று(07) நாடாளுமன்ற அமர்வின் போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளிகள் கண்பார்வை இழந்துள்ளனர், சிலர் முழுமையாக பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர்.

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

அமைச்சரவை தீர்மானம்

ஆகவே, இது தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் கண் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு | Victims Of Eye Treatment In Nuwaraeliya

இதன் விளைவாக ஊனமுற்ற 17 நோயாளிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதாக நேற்று அமைச்சரவை முடிவு செய்தது. இதுபோன்ற இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், சம்பந்தப்பட்ட போதைப்பொருளை இறக்குமதி செய்தமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்

விசாரணை

நாங்கள் இந்த விடயத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம், அத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியாவில் கண் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு | Victims Of Eye Treatment In Nuwaraeliya

அத்துடன், கடந்த மே 2023 இல், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருந்ததால் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பலரின் பார்வை பலவீனமடைந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 05, 2023க்குப் பிறகு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளின் கண்பார்வை பலவீனமடைந்ததுள்ளதுடன் சிலருக்கு கண் பார்வை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

கல்கிஸ்சையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

கல்கிஸ்சையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW