வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு வலுவான நிலையில் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasingha) தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகமொன்றிற்கு நேற்று(06) வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலக்கு சுமார் ரூ.5.6 பில்லியனாக இருந்தது, ஆனால் நாங்கள் அதை ரூ.6.5 பில்லியனாக உயர்த்தியுள்ளோம்.
கையிருப்பு...
அத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில், பழைய கடன்களைத் தீர்த்த பின்னர் கையிருப்பு 6.1 பில்லியன் ரூபாயாக காணப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதை 7 பில்லியன் ரூபாயாக உயர்த்துவதே எங்கள் நோக்கம், இது அடையக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 3 - 4 பில்லியன் ரூபாய் செலுத்துதல்கள் நிர்வகிக்கப்படும்.
வலுவான தாங்கல்
மேலும், 8 பில்லியன் ரூபாய் கையிருப்பினை நாம் பராமரித்தால், வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளை அடைவதற்கான வலுவான தாங்கல் எங்களிடம் காணப்படும்.
எனினும் தற்போதைய இருப்பு நிலைகள் இந்த சவால்களை கையாள்வதற்கு நிலையானதாக உள்ளது என்று வீரசிங்க விரிவாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |