திருகோணமலை பகுதியில் நடப்பட்டுள்ள பதாகையால் மக்கள் மத்தியில் பரபரப்பு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Laksi Jan 07, 2025 05:30 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee) – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான பகுதியில் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பதாகையானது தொல்லியல் திணைக்களத்தினால் நேற்று (6) நடப்பட்டுள்ளது.

“1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு இந்த பதாகை நடப்பட்டுள்ளதுடன் இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுப்பு

மக்கள் ஆர்ப்பாட்டம்

குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருகோணமலை பகுதியில் நடப்பட்டுள்ள பதாகையால் மக்கள் மத்தியில் பரபரப்பு | Trincomalee Verugal Area Banner Issue

தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 01ஆம் திகதியன்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW