திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

Trincomalee Sri Lanka Cabinet Eastern Province
By Laksi Jan 07, 2025 12:08 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee) மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவைக்கு (2003.09.01) அன்று டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டார். 

மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுப்பு

அரசாங்க அதிபர் பதவி

இந்தநிலையில், இவர் தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர்( பதில் கடமை), ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம் | Appointment Of Trinco Government President

அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW