யாழில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

Jaffna Jaffna Teaching Hospital Death
By Rukshy Mar 23, 2025 10:35 AM GMT
Rukshy

Rukshy

யாழ்ப்பாணத்தில் (Jaffna) குளிர்பானமென டீசலை அருந்திய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை - நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் 9 மாதங்களுமான ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் நிலைமை : வெளியான தகவல்

வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் நிலைமை : வெளியான தகவல்

அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை தமது உழவு இயந்திரத்தில் திருத்த பணிகளில் ஈடுபட்டதன் பின்னர் அதிலிருந்த டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

யாழில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை | 9 Month Old Baby Dies In Jaffna

இதன்போது, அங்கு வந்த குழந்தை குளிர்பானமென நினைத்து டீசலை பருகி மயக்கமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. 

அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW