ஏறாவூரில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Dec 05, 2024 10:44 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (4) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 8 பேரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

8 பேர் கைது

மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் அந்தந்த  நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த பின்னர் நீதிமன்றங்களுக்கு முன்னிலையாகாததால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது | 8 People Arrested In Police Special Roundup Eravur

இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் விசேட சுற்றிவளைப்பினை நேற்று பொலிஸார் மேற்கொண்டனர்.

இதன்போது, தலைமறைவாகி இருந்த நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW