இலங்கையில் சீன பிரஜைகள் உட்பட எட்டு பேர் கைது

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation China
By Shalini Balachandran Aug 02, 2024 09:59 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட எட்டு பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக காவல் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை அதிகரிப்பு காரணமாக எடுக்கப்படும் நடவடிக்கை

முட்டை விலை அதிகரிப்பு காரணமாக எடுக்கப்படும் நடவடிக்கை

சந்தேக நபர்கள் 

இதனடிப்படையில், இந்த சந்தேக நபர்கள் 24 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஆறு பேர் சீன பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன பிரஜைகள் உட்பட எட்டு பேர் கைது | 8 Citizens Involved In Cyber Crimes Arrested

அத்தோடு, மற்ற இருவரும் கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்களிடம் இருந்து ஒன்பது கணனிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகை சிம் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW