பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது

Sri Lanka Police Investigation Crime General Election 2024
By Laksi Nov 06, 2024 06:52 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,  சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 9 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 4 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முறைப்பாடு

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது | 8 Candidates Arrested For Violating Election Rules

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1365 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 277 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW