கல்முனையில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவகங்கள்! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

Sri Lankan Peoples Ice Cream National Health Service Sammanthurai
By Rakshana MA Mar 27, 2025 05:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவை கையாண்ட உணவக உரிமையாளர்கள் மீது 70,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது உணவகங்கள் உள்ளிட்ட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராகவும் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம்

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம்

 சட்ட நடவடிக்கை

இதன் போது பலசரக்கு கடைகள் ஹோட்டல்கள் துரித உணவுக் கடைகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த உரிமையாளர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு எதிராக தலா 25000, 15000, 20000, 10000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி கடுமையான எச்சரிக்கையையும் செய்யப்பட்டுள்ளது.

கல்முனையில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவகங்கள்! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை | 70000Rs Fine On Ice Cream Factory Restaurant

மேலும், இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாத விடத்து மூடுவதற்கான இறுதி உத்தரவு வழங்க நீதிவானினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery