இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம்

Ramadan Sri Lankan Peoples Eastern Province Iftar
By Rakshana MA Mar 26, 2025 05:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று(25) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இப்தார் நிகழ்வானது, மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சிறுநீரக விற்பனை மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்

சிறுநீரக விற்பனை மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்

இப்தார் நிகழ்வு

இதன்போது கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் எஸ்.எல்.எம்.நஷ்மத் பலாஹி றம்லான் நோன்பு தொடர்பிலான சிறப்பு சொற்பொழிவாற்றியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் | Iftar Event For Unity For Religion

மேலும், இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி சிறிக்காந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் மற்றும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபீயான் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதுடன், தமிழ் - முஸ்லிம் என இன வேறுபாடின்றி பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

குறுகிய காலத்தில் மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை!

குறுகிய காலத்தில் மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை!

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery