6,000 உதவித்தொகைக்கான மாணவர்கள் தேர்வு : வெளியான அமைச்சரவை தீர்மானம்
பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாவை பெற தகுதியான மாணவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை பாடசாலை மட்டத்திலேயே மேற்கொள்ளப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று(31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நிவாரணத்திற்கு தகுதியான பிள்ளைகள் தொடர்பான ஆவணங்களை தயாரிக்க அதிபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, பல்வேறு ஆதாரங்களில் இருந்து பதிவாகும் தகவல்களை ஆராய்வதற்காகவும், தற்போதைய அரச நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பான பொதுமக்களின் புகார்களின் உண்மைகளை முன்வைப்பதற்காகவும் இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் மட்டத்தில் நாடளாவிய ரீதியில் சேவையாற்றும் முதல் தர அதிகாரி அல்லது விசாரணைச் செயற்பாடுகள் தொடர்பான அனுபவமுள்ள முதல் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் இந்தப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |