பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று (3) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
குறித்த நிலநடுக்கமானது மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அத்தோடு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள 'ரிங் ஒப் பயர்' எனப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |