அறிவுக்களஞ்சியப் புகழ் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, சாய்ந்தமருது அல்-ஹிலால் வரவேற்பு மண்டபத்தில் இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். யாக்கூப் தலைமையில் நேற்று(02) நடைபெற்றது.
[XHNDR59
நினைவேந்தல் நிகழ்வு
இந்த நிலையில், ஊடக மற்றும் இலக்கிய அதிதிகள் பலரும் சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் ஊடக, சமூக, கல்வி, அரசியல் செயற்பாடுகள், சேவைகள் தொடர்பில் இங்கு நினைவுரை நிகழ்த்தினர்.
மேலும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |