தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு

South Eastern University of Sri Lanka Sri Lanka Education
By Laksi Oct 17, 2024 10:34 AM GMT
Laksi

Laksi

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது தொழிநுட்பவியல் பீட பிரதான கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (16) மாநாட்டின் தலைவரும் பதில் உபவேந்தரும் பீடாதிபதியுமான கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஆய்வு மாநாட்டை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்தது.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

மாநாடு 

மாநாட்டின் இணைப்பாளரும் பயோ சிஸ்டம் டெக்னாலஜியின் துறைத் தலைவருமான கலாநிதி முனீப் எம். முஸ்தபாவின் வழிகாட்டலிலும் ICST 2024 செயலாளர் ஏ.ஆர்.பாத்திமா ஷபானாவின் நெறிப்படுத்தலிலும், “நிலையான எதிர்காலத்திற்கான நவீன தொழிநுட்பங்கள் மூலம் புதுமையான எல்லைகளை ஆராய்தல்” எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு | 4Th International Conference Southeastern Uni

மாநாட்டுக்கு விசேட பேச்சாளர்களாக பிரித்தானியாவின் Huddersfield பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிலாந்தி அமரதுங்க மற்றும் தாய்லாந்தின் Asian Institute of Technology யின் உதவி பேராசிரியர் Chaklam Silpasuwanchai ஆகியோர் நிகழ்நிலையூடாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

ICST2024 ஆய்வு மாநாட்டுக்கு 81 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 52 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டன.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

ஆய்வுக் கட்டுரைகள்

நிகழ்வின் Technical Session ல் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு | 4Th International Conference Southeastern Uni

நிகழ்வுக்கு லைக்கா ஞானம் பவுண்டேஷன் மற்றும் MYOWN Education Aid என்பன முழு அனுசரணை வழங்கியிருந்தன.

இதன்போது, கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர் எம்.எச். தௌபீக், லைக்கா ஞானம் பௌண்டேசன் அம்பாறை இணைப்பாளர் அகிலன் MYOWN Education Aid இன் பிரதிநிதிகள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery