40 வருடங்களின் பின்னர் நன்றியுணர்வுக்காக ஒன்று கூடல்
ஏறாவூரில் (Eravur) 40 வருடங்களுக்குப் பின்னர் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல். முஹைதீன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர் தரப்பாடசாலையில் 1983ஆம் ஆண்டின் முதலாம் வகுப்பு மாணவர்களால் நேற்று (10) இவ் ஒன்று கூடல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
கல்விப் புலமைக்காக கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோரை கௌரவித்து நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் குறித்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவுச்சின்ன நிகழ்வு
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர் தரப்பாடசாலையில் கற்பித்து மரணித்த ஆசிரியர், அதிபர்களுக்கு இறை அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தற்போது உள்ளவர்களுக்கு பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைவரின் நீங்கா நினைவுகளும் பகிரப்பட்டதுடன், குறித்த நிகழ்வில் மொத்தமாக ஆசிரியர்கள், அதிபர்கள் என 35 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை ஏறாவூர் கோட்டக்கல்விப் பிரிவில் அதிக மாணவர்கள் கற்கும் பாடசாலையாக காணப்படுகின்றது.
தற்போது இப்பாடசாலையில் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |