நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

By Laksi Sep 18, 2024 11:11 AM GMT
Laksi

Laksi

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

மருந்துகள்

இந்நிலையில், வெளிப்படையான முறையில் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொடர்ந்தும் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு | 40 Medicines Shortage In Hospitals

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தொடர்பில் முறையான முறைப்பாடு எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று (18) அனைத்து வைத்தியசாலைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW