கிண்ணியாவில் 4 வயது சிறுவனின் சோழன் உலக சாதனை
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த நான்கு வயது முஹம்மட் அக்லாம் பிலால் “கணித அடுக்குகளின் விதிகள்” முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியிலும் கூறி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனையை பறைசாற்றும் முகமாக கிண்ணியா மத்திய கல்லூரியில் நேற்று (29) சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், தனியார் அமைப்பு ஒன்றுடன் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
சாதனைச் செல்வன்
சோழன் உலக சாதனை உறுதி செய்யப்பட்ட சிறுவனுக்கு, அந்த நிறுவனத்தின் நடுவர்களால் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் கோப்பு போன்றவை வழங்கி பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்றதுடன் சிறப்பு விருந்தினராக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் முனவ்வரா, கின்னியா மத்திய கல்லூரியின் அதிபர் நஜாத், கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சமீம் மற்றும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு இன்னும் பல முக்கியஸ்தர்களும் இணைந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |