ஐஸ் போதைப் பொருளுடன் கைதான நால்வரிடம் விசாரணை முன்னெடுப்பு
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான 4 சந்தேக நபர்களிடம் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று (16) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மேற்படி, சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 40, 24, 21, 30 வயது சந்தேக நபர்கள் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் இவ்வாறு கைதானவர்கள் சென்னல்கிராமம் 02, மலையடிக்கிராமம் 01, காரைதீவு 06, மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர்களார்.
கைது நடவடிக்கை
கைதான இச்சந்தேக நபர்களில் 30 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபரும் உள்ளடங்குகின்றார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து மொத்தமாக 5 கிராம் 10 மில்லி கிராம், 1 கிராம் 50 மில்லிகிராம், 1 கிராம் 10 மில்லிகிராம், 1 கிராம் 950 மில்லிகிராம், என ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தன.
மேலும், சந்தேக நபர்கள் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் கட்டளையின் பிரகாரம் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




