கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நாலாயிரம் சிறுவர்கள்

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples School Children
By Rakshana MA Aug 14, 2025 03:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்திநெத்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்லாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

சிறுவர்களின் நிலை

இதில் குறித்த சிறுவர்களின் தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றுள்ளது அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தைய வேறு திருமணம் முடிப்பது அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய் தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நாலாயிரம் சிறுவர்கள் | 4 000 Sri Lankan Kids At Risk

அதேவேளை மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன் இலங்கை பூராகவும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு , பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

இத்துடன் மாவட்டத்தில ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸார் மாத்திரமே தற்போது உள்ளனர்.

எனவே இந்த குறைபாட்டை நிலர்த்தி செய்ய 50 பொலிஸார் மாவட்டத்துக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்

முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்

திருகோணமலையில் அரசு மொழி தின நிகழ்வு முன்னெடுப்பு

திருகோணமலையில் அரசு மொழி தின நிகழ்வு முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW