கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன உறவுகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு

Batticaloa SL Protest Eastern Province
By Laksi Sep 05, 2024 04:11 PM GMT
Laksi

Laksi

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அவர்களுக்கான நீதிகோரிய ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது இன்று (5) கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆந் திகதி கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் தஞ்சம்பெற்றிருந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை.

திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினால் நாட்டை பொறுப்பேற்கவில்லை: சஜித் பகிரங்கம்

திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினால் நாட்டை பொறுப்பேற்கவில்லை: சஜித் பகிரங்கம்

நீதிகோரி ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றிலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன உறவுகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு | 34Th Anniversary Of 158 Disappeared In Eastern Uni

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதிகோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் உறவுகள் மற்றும் மாணவர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில்

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில்

நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதியாக ரணில் திகழ்வார்: அன்வர் எம் முஸ்தபா சுட்டிக்காட்டு

நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதியாக ரணில் திகழ்வார்: அன்வர் எம் முஸ்தபா சுட்டிக்காட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW