அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்
அம்பாறையில் (Ampara) கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம்- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி - உமிரி கடற்கரையில் நேற்று (25) மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாண்டியடி - உமிரி பகுதியில் தந்தை (வயது 38), மகன் (வயது 15) மற்றும் அவர்களின் உறவினரின் மகன் (வயது 18) என மூவர் கிறிஸ்மஸ் தினமான நேற்று கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றனர்.
தேடும் பணி
இதன்போது, அவர்கள் கடலில் நீராடிய போது கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபர்களின் சடலங்களைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |