மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முப்பெரும் விழாக்கள்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் முப்பெரும் விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் எம்.ஐ.அஸ்மி தலைமையில் நேற்று(26) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
முப்பெரும் விழாக்கள்
மாணவர்களுக்கான கற்றல் வள நிலையம் (நூலகம்) மற்றும் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு, அண்மையில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.ஸஹாபி மற்றும் சபீனா ஆகியவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா என்பன இடம்பெற்றுள்ளன.
இதன்போது மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும், பரிசில்களையும் நூலகத்திற்கான 32"அங்குல LED தொலைக்காட்சியையும் சாய்ந்தமருது தனியார் நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம். ஜிப்ரி அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹிதுல் நஜீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






