தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் ஆரம்பம்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 05, 2024 07:00 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக இன்றும் (05) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று (04) ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு நாளை (06) வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள்

தபால் மூல வாக்கு

தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான, இன்று முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் ஆரம்பம் | 2Nd Day Of Postal Voting In Sri Lanka

அத்துடன், நாளைய தினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

தபால் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

 விசேட பொலிஸ் பாதுகாப்பு

இதேவேளை, அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி எவரேனும் வாக்களிக்கச் சென்றால், தபால் மூல வாக்களிப்பைக் கண்காணிக்கும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் குறித்த வாக்காளரின் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் ஆரம்பம் | 2Nd Day Of Postal Voting In Sri Lanka

அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டாம் எனச் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நிலையங்கள் என்பவற்றுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சவர்க்காரங்கள், ஷாம்புகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை

அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சவர்க்காரங்கள், ஷாம்புகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW