நாட்டில் ஒரு நாளைக்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Accident
By Rakshana MA Jul 23, 2025 03:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் ஏற்படும் திடீர் விபத்துகளால் நாளாந்தம் சராசரியாக 29 பேர் உயிரிழக்கின்றனர் என சமூகநல சுகாதார நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்கா (Samitha Srithunga) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு நபர் விபத்தால் மரணம் அடைகின்றார்கள். இது தவிர்க்கக்கூடிய ஒரு பேரழிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறையில் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

சம்மாந்துறையில் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

ஆவணங்கள் 

இந்தத் தகவலை, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, விபத்துத் தடுப்பு குறித்து பேசியபோது வைத்தியர் சிறிதுங்கா வெளியிட்டார்.

நாட்டில் ஒரு நாளைக்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல் | 29 Die Daily In Accidents Sri Lanka

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாராந்த புள்ளிவிபரத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆண்டுக்கு சுமார் 10,600 பேர் திடீர விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

இதனுடன், 1,500 பேர் தவறி விழுந்து ஏற்படும் காயங்களால் மரணமடைகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வழிகள் இருக்கின்றன.

அதற்காக, பொதுமக்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கண்காட்சி

தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கண்காட்சி

நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை

நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW