ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த 29 தலைவர்கள் கொடூர கொலை

Bangladesh World
By Shalini Balachandran Aug 07, 2024 08:41 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் போராட்டக்காரர்களின் வன்முறை நிற்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடுமையான தாக்குதல் அரங்கேறி வருவதுடன் இதுவரை 440 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அதிபர் முகமது, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நோபல் பரிசு பெற்ற 84 வயது முகமது யூனுஸ் அடுத்த இடைக்கால அரசுக்கு தலைவராக இருப்பார் என்று அறிவித்திருந்தார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

சிறப்பு விமானம்

இருப்பினும், வங்கதேசத்தில் இருந்த ஏராளமான இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் இந்து மக்கள் வாழும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை வங்கதேச அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த 29 தலைவர்கள் கொடூர கொலை | 29 Awami League Leaders Killed In Bangladesh

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டாக்காவிலிருந்து ஆறு குழந்தைகள் உள்பட 205 பேர் இந்தியா அழைத்து வரப்பட்துடன் செவ்வாயக்கிழமை புது தில்லியிலிருந்து டாக்காவுக்குச் சென்ற சிறப்பு விமானம் அங்கிருந்து 205 பேரை பத்திரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது.

டில்லி மற்றும் டாக்கா இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவை இயக்கத் தொடங்கியதுடன் நேற்று (08) காலை விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலை நேர விமானத்தை ஏர் இந்தியா இயக்கியிருந்தது அத்தோடு சென்னையில் இருந்து வங்கதேசத்துக்கு இன்று (07) மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

இந்தோனேசியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW