விசேட சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட பலர் கைது

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Nov 07, 2024 08:23 AM GMT
Laksi

Laksi

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது ஜம்பட்டா வீதி, புனித அந்தோனி வீதி, இரத்னம் வீதி ஆகிய பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் , 5,900 மில்லிகிராம் ஹெரோயின், 10 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல்

அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல்

போதைப்பொருட்கள் மீட்பு

குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட பலர் கைது | 28 People Were Arrested In A Special Roundup

ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு "அமாய்" என்ற மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட சுமார் 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

திருகோணமலையில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்

திருகோணமலையில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW