கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Ampara Sri Lanka Police Investigation Eastern Province Crime Kalmunai
By Laksi Dec 11, 2024 11:32 AM GMT
Laksi

Laksi

கல்முனை- துறைநீலாவணை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (11) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 43 மற்றும் 39 வயதுடைய மத்தியமுகாம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களாவர்.

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

சான்றுப்பொருட்கள்

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது | 2 Arrested With Kerala Ganja In Kalmunai

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேருந்து ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

மேலதிக விசாரணை

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது | 2 Arrested With Kerala Ganja In Kalmunai

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பதவியேற்ற குணநாதன்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பதவியேற்ற குணநாதன்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW