கம்பளையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி!
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பளை காவல் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |