மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுதலை
Batticaloa
Anura Kumara Dissanayaka
Department of Prisons Sri Lanka
Eastern Province
Prison
By Laksi
மட்டக்களப்பு (Batticaloa) சிறையிலிருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று (04) ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்று வந்த கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |