விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Ampara Anuradhapura Vijitha Herath Sri Lankan Peoples Ministry of Agriculture
By Laksi Oct 14, 2024 08:46 AM GMT
Laksi

Laksi

நெல் விவசாயிகளுக்கான அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையானது இன்று (14) முதல்  அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபாயும் மற்றும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

உர மானியம்

அத்தோடு, பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் மகாவலி பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம் | 15000 Rupees Fertilizer Subsidy For Farmers

மேலும், நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW