இலங்கையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Laksi Aug 02, 2024 12:03 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 32 ஆயிரத்து 866 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் சடுதியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டெங்கு நோயாளர்களின் வீதம்

இந்தநிலையில், டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் | 14 Dengue Patients Have Died In Sl Warning Peoples

இதனையடுத்து, எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

பொது மக்களுக்கு எச்சரிக்கை

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியான அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் | 14 Dengue Patients Have Died In Sl Warning Peoples

இதனையடுத்து, பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்திற் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாக பொதுக்கூட்டம்

முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாக பொதுக்கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW